இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ டோக்கியோ நகர முதலீட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினருக்கும், டோக்கியோ முதலீட்டாளர்களுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஜப்பானை சேர்ந்த 25 முதலீட்டாளர்கள் கலந்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


