நாட்டில் அரிசியை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி வைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த நிதியமைச்சர், காலநிலை மற்றும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, அரிசியை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்த தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இலங்கையில் அரிசிக்கு இயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு கறுப்பு சந்தை ஏற்படுவதை தவிர்க்க எதிர்வரும் மார்ச் மாதம் வரை அரிசி இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி வைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் வரை உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும், நாட்டின் தேவைக்கு ஏற்றளவு அரிசி இருந்தாலும் கறுப்பு சந்தையை உருவாக்க பலர் முயற்சிக்கலாம் என்று கூறினார்.
அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அரிசி இறக்குமதிக்கு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

