அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபை ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிக்கும் பணியை நேற்று முதல் ஆரம்பித்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்.பீ.திசாநாயக்க தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆலைகளுக்கு மாத்திரமன்றி, பாரிய அளவிலான ஆலைகளுக்கும் நெல் விநியோகிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் கீழ் ஒன்றரை இலட்சம் மெற்றிக்தொன் நெல் விநியோகிக்கப்படும்.
இதன் மூலம் தனியார் துறை வசமிருக்கும் அரிசியும் சந்தைக்கு வந்து அரிசியின் விலை குறையக்கூடும் என்றும் திரு.திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

