உலகில் அதிக பலம் பொருந்திய தலைவர்கள் பட்டியலை உலக புகழ்பெற்ற போர்ப் சஞ்சிகை வெளியிட்டுள்ளது.2016ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆய்வு அறிக்கையின் மூலமே இந்த கணிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, உலகில் அதிக பலம் பொருந்திய நபராக ரஷ்ய ஜனாதிபதி விலாடிமீர் புடின் காணப்படுவதாக போர்ப் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவது இடத்தை ஜேர்மன் ஜனாதிபதி ஏங்கலா மார்க்கல் பிடித்துள்ளதுடன், நான்காவது இடத்தை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வகிக்கின்றார்.அத்துடன், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசர் பிரான்ஸில் ஐந்தாவது இடத்தை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளதாக போர்ப் சஞ்சிகை கூறியுள்ளது.
7ஆவது இடத்தில் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் பில் கேட்ஸ் பிடித்துள்ளார்.உலகில் அதிக பலம் பொருந்திய தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 9ஆவது இடத்தை வகிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.மேலும், பேஸ்புக் நிறுவுநர் மார்க் சுகர்பர்க் உலகில் அதிக பலம் பொருந்திய தலைவர்கள் பட்டியலில் 10ஆவது இடத்தை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளார்.
தெற்காசிய நாடுகளில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடியே பலம் பொருந்திய தலைவர் என போர்ப் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

