இரு பிள்ளைகளின் தாயை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

326 0

1833072091courtsஇரு பிள்ளைகளின் தாயை கொலை செய்தவருக்கு மரண தண்டனை பெண்ணொருவரை கொலை செய்த குற்றத்தில் நபரொருவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அதன்படி சட்டமா அதிபர் திணைக்களத்தால் அநுராதபுரம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், கலேன்பிந்துனுவெவ பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

குறித்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.