அபிவிருத்தி தொடர்பான விசேட சட்டமூலத்தின் ஊடாக உருவாக்கப்படுகின்ற சிறப்பு அமைச்சு பதவியானது, ஜனாதிபதியினதும் ஏனைய அமைச்சர்களினதும் அதிகாரங்களை குறைக்கும் வகையில் அமையும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் இன்று கொழும்பில் ஏற்றபாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ எல் பீரிஸ் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இந்த அமைச்சு பதிவி மூலம் ஸ்ரீலங்கா சுந்திர கட்சி அமைச்சர்களின் அகதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை அதிகாரம் இருந்த போதிலும் மக்கள் ஆதரவு இல்லை என நடாளுமன்ற உறுப்பினர் மகிந்தாநந்த அலுத்கமகே தெரிவித்தார்.

