புதிய அரசியல் அமைப்பு வர்த்தமானியில் அறிவிக்கப்படும் முன்னர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களுக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி நெலிகல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அஸ்கிரிய பீடத்தின் மத்திய செயற்குழு உறுப்பினரான கொடகம மங்கள தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
குருடர்கள் யானைக்கு அடையாளங்கள் விபரிப்பது போன்று அரசியல் அமைப்பு உருவாக்குவதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் மகா சங்கத்தினருக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படுவதில்லை என கொடகம மங்கள தேரர் குறிப்பிட்டார்.

