நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் பற்சிகிச்சைப் பிரிவுகள் அபிவிருத்தி செய்யப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

353 0

downloadநாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையுடன் இணைந்ததாக சகல வசதிகளையும் கொண்ட பல் வைத்தியசாலையொன்று விரைவில் அமைக்கப்படுமென்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பற்சிகிச்சை பிரிவுகளின் அபிவிருத்திக்கு தேவையான 20 கோடி ரூபா உபகரணங்கள் அண்மையில் கையளிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை சகல மருத்துவ வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்ய 130 கோடி ரூபா முதல் கட்டமாக ஒதுக்கப்பட இருப்பதாகவும்.

150 கோடி ரூபா இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கென வழங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.