உடப்புஸ்ஸல்லாவை வெலிமடை பகுதியில் டளஸ்த்வத்தை கோவிலுக்கு அருகில் வான் வண்டி ஒன்று 130 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 12 பேர் காயமடைந்ததுடன் குழந்தை ஒன்று பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு நடந்த குறித்த சம்பவத்தில் இரண்டு வயது நிரம்பும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த 12 பேரும் உடபுஸ்ஸல்லாவை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் படுகாயமடைந்தவர்கள் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கதிர்காமத்துக்கு யாத்திரை சென்று திரும்பும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

