தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரமோனுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரமோன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை தஜிகிஸ்தான் ஜனாதிபதி நேற்று மாலை சபநாயகர் கரு ஜயசூரியவை பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்க வருகை தந்துள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரமோன் இன்று நாட்டில் இருந்து புறப்படவுள்ளார்.

