சிறுவர்களை தொழிலாளிகளாக பயன்படுத்துவதை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை – டபிள்யு.டி.ஜி. செனவிரத்ன

358 0

john1சிறுவர்களை தொழிலாளிகளாக பயன்படுத்துவதை முழுமையாக ஒழிப்பது தொடர்பிலான தேசிய கொள்கையொன்றை தயாரித்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையினை மீள் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் ஒழுங்கின் கீழ் சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை முழுமையாக ஒழிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டி.ஜி. செனவிரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.