மைத்திரி துறைமுக விற்பனை குறித்து அறிவித்தாரா?

251 0

huybசீனா நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தாரா என கூட்டு எதிர்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராவார். இதனுடன் தொடர்புடைய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உட்பட இந்த தீர்மானம் குறித்து அறிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் வினவிய போது, அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் முடிவெடுப்பதற்கு பொறுப்பாக இருக்கின்றனர் என அரசாங்கம் அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது உண்மையாக இருந்தால், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ள பணிக்கு என்ன ஆகும்? ஹம்பாந்தோட்டை துறைமுக தொடர்பான முடிவு அமைச்சருக்கு அப்பால் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எல்லாம் இறுதி செய்யப்பட்டதன் பின்னர் அவர் அவற்றின் சுருக்கங்களை மாத்திரமே வெளியிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஊழல் ஒப்பந்தம் பற்றி ஆய்வு செய்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தா அலுத்கமகே தெரிவித்துள்ளார்.