உலகின் மிகப்பெரிய கிறிஸ்மஸ் மரம் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!

351 0

article-doc-iv5ax-4mvltwqwjede6b84ce31823f3e85-53_634x458கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக உலகிலேயே அதிக உயரமான (100 மீற்றர்) நத்தார் மரத்தினைக் கட்டும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இது கொழும்பு நகரின் மத்தியில் கட்டப்பட்டு வருகின்றது.

நத்தார் மரம் கட்டும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை இது பணத்தை விரயமாக்கும் செயலென்று கத்தோலிக்கச் சமூகத்தினால் பெரும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பல மில்லியன் செலவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நத்தார் மரத்தின் கட்டுமானப் பணிகள் இடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கத்தோலிக்க மதகுருமாருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து நத்தார் மரம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கத்தின் நிதி பயன்படுத்தப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே உயரமான நத்தார் மரம் கடந்த வருடம் சீனாவில் 55 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

தற்போது கொழும்பிலுள்ள காலித்துறைமுகத்துக்கு முன்னால் அமைக்கப்படும் குறித்த நத்தார் மரமே உலகிலேயே உயரமான நத்தார் மரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.