அரசியலமைப்பு திருத்தம் ஜனவரி 9 இல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்!

350 0

1560321059untitled-1புதிய அரசியலமைப்புத் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் விவாதம் நடாத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அவைத் தலைவரான லக்ஸ்மன் கிரியெல்ல, சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்திருப்பதாவது,

‘அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான யோசனைகளைத் தயாரிக்க அமைக்கப்பட்ட ஆறு உப குழுக்களின் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை மூன்று நாட்கள் விவாதம் நடாத்தப்படவுள்ளது.

சிறீலுங்காவில் அரசியல் மாற்ற செயன்முறைகள் ஊடகங்களின் முன்பாக நடப்பது இதுவே முதல்தடவை. முன்னர் ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. இம்முறை என்ன நடைபெறுகின்றது என்பதை மக்கள் பார்க்கமுடியும்.

குறித்த விவாதத்தின் பின்னர், புதிய அரசியலமைப்பை வரையும் நடவடிக்கைகள் அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.