நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்து செய்யப்படக் கூடாது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனைக் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதற்கு நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நடைமுறையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அமுலில் இருப்பதன் காரணமாகவே உயர் நீதிமன்றம் 13ம் திருத்தச் சட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மாகாணசபைகள் எதேச்சாதிகார போக்கில் செயற்படுவதை தடுப்பதற்கு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அவசியமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

