தமிழ்மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

98 0

தமிழர் திருநாள் 2021
தமிழ்மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நாடே பெரிதென்று பொங்குக

பொங்கல் திருநாளாம் தமிழர் பெருநாளாம்
மங்காத ஒளிவீசப் பொங்குக
எங்கள் உயிர்நாதம் ஈழப் பேரொலிகள்
ஒற்றுமைக் கரமாகப் பொங்குக
நாடே பெரிதென்று தலைவன் பொறித்ததை
மனதில் ஏற்றியே பொங்குக
நாளும் பொழுதுமவன் யார்த்த விதிமுறைகள்
வெல்லும் திசைநோக்கிப் பொங்குக

பிரிவினை பேசாது அறிவதைக் கூராக்கி
ஒற்றுமை வேலாகிப் பொங்குக
உரிமையின் முடிசூட ஒன்றாகி உரமாகி
உறுதியின் வீச்சாகிப் பொங்குக
நிலத்தினில் வேரூன்றும் பகைவரின் காலடி
தகர்த்திடப் பறைசாற்றி பொங்குக
பலத்தினில் விசும்பாகி ஈழத்தின் கொடியேற
மிடுக்குடன் வீறாகிப் பொங்குக.