தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தமது சத்தியாகிரக போராட்டம் தொடரும் என மாஹம்புர துறைமுக சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தில் தலைவர் யு.கே ஒமேஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகள் உரிய பதிலை பெற்றுக்கொடுக்கும் வரையில் தமது போராட்டத்தை கைவிட போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாஹம்புர துறைமுக பணியாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தை கலைக்க நேற்று பாதுகாப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டபோது முறுகல் நிலை ஏற்பட்டது.
இதன்போது மேற்கொண்ட நடவடிக்கையின் போது இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை போராட்டம் நடத்தியவர்களிடம் இருந்து அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
போராட்டத்தின் போது துறைமுகத்தின் சொத்துக்களுக்கும், நங்கூரமிட்டிருந்த கப்பல்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு ஏற்பட்ட நட்டத்தை போராட்டம் நடத்திய தரப்பினரிடமிருந்து அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

