சாசகர்கள் வேடத்தில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் – மாத்தளையில் கைது

286 0

beg1மாத்தளை நகரில் யாசகர் வேடத்தில் இருந்த பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட மூன்று பேர் நேற்று காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நகரில் பாதசாரிகள் கடவையில் செல்லும் பொதுமக்களுக்கு இடையு விளைவித்து வரும் யாசகர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டனது.
இதன்போது 16 யாசகர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, திறந்த பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட இருவரும், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு கொண்ட ஒருவரும் கைது செய்யப்பட்டவர்களுன் அடங்குவதாக தெரியவந்தது.

இந்தநிலையில், அவர்கள் மாத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.