ஐ.எஸ் தீவிரவாதிகள் மீண்டும் பல்மைரா நகரை கைப்பற்றியுள்ளனர்.
சிரியாவில் பழைமையான நகராக பல்மைரா, கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னரும் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்தது.
எனினும் கூட்டு படைகளுடன் இணைந்து அரச படைகள் மேற்கொண்ட தாக்குதலில் அவர்கள் அங்கிருந்து வெளியோற்றப்பட்டனர்.
எனினும் தற்போது அந்த நகரை மீண்டும் போராளிகள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகளின் தாக்குதலில் சுமார் 50யிற்கும் மேற்பட்ட அரச படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

