இலங்கையில் புதிய அமரிக்க தூதரகம்

261 0

47176311இலங்கையுடனான நற்புறவின் அடையாளமாக இலங்கையில் புதிய  அமரிக்க தூதரகத்துக்கான ஆரம்பப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அமரிக்க தூதுவர் அட்டுல் கெசாப் மற்றும் அமரிக்காவின் வெளிநாடுகளுக்கான கட்டித்துறை பேரவையின் முதனிலை பணிப்பாளர் வில்லியம் மோசார் ஆகியோர் இந்த பணிகளுக்கான அடிக்கல்லை நேற்று நாட்டிவைத்தனர்.

இந்த புதிய பன்முக கட்டிடத்தொகுதி,  தற்போதைய தூதரகத்தின் அயலில் உள்ள காணியுடன் இணைந்ததாக விஸ்தரிக்கப்படவுள்ளது

5.7 ஏக்கர் பரப்பைக்கொண்ட இந்த கட்டிடத்தொகுதியில் கரையோர பாதுகாப்பு காவலர் இருப்பிடம் , துணைக்கட்டிடங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளை கொண்டமையவுள்ளன.

இதேவேளை அமரிக்க விழுமியங்களை பிரதிபலிப்பதாக இந்த கட்டிட நிர்மாணம் அமையவுள்ளதாக அமரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.