பசிலுக்கு எதிராக மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

234 0

basilமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரினால் புதிய குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் இந்த குற்றபத்திரிகை இன்று கொழும்பு மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 50 லட்சம் நாட்காட்டிகளை அச்சிட்டு அரசாங்கத்திற்குகு 29 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பிலே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்குட்பட்ட நிதியிலிருந்து குறித்த நாட்காட்டி அச்சிடப்பட்டதாக முன்னதாக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த குற்றபத்திரிகையில் தொழில்நுட்ப கோளாறு காணப்படுவதாக தெரிவித்து சட்டமா அதிபர் அதனை நேற்று விலக்கி கொண்டார்.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான கித்சிறி ரணவக்க ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், இன்று தாக்கல் செய்யப்பட்ட புதிய குற்றப்பத்திரிகை மூலம் இது தொடர்பான வழக்கு தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.