இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு

228 0

eleஇலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த நொவம்பர் மாதம் 16 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் 1 லட்சத்து 67 ஆயிரத்து 217 பேர் சுற்றுலாப் பயணிகளாக இலங்கை சென்றுள்ளனர்.

குறிப்பாக சீனா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் வருகை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கடந்த 11 மாதங்களில், இலங்கைக்கு 1.82 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை சென்றுள்ளனர்.

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 14.7 சதவீத அதிகரிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.