ஜெயம்பதி விக்ரமரத்னவுக்கு கொலை மிரட்டல்

258 0

jayampathy_wickramaratne_dr-300x273தமக்கு தொலைபேசி ஊடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயம்பதி விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் ஆரம்பத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

புதிய அரசியல் யாப்பு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாகவே இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

தமக்கு தமது குடும்பத்தாருக்கும் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வாறான அச்சுறுத்தல்களால் தாம் தமது கடமையில் இருந்து விலகி இருக்கப் போவதில்லை என்று ஜெயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.