வரலாற்று பாடநூலில் தமிழர் தொடாபான வரலாறு புறக்கணிப்பு – ஆராய குழு

226 0

raaaaaaaaaaதமிழ் மொழி மூல வரலாற்று பாடத்திட்டத்தில் தமிழர் தொடர்பான வரலாறு புறக்கனிக்கப்பட்டிருப்பது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் மூலமாக வெளியிடப்படுகின்ற பாடநூல்களில் வரலாற்று பாடத்திட்டத்தில் தமிழர் தொடர்பான வரலாறு திட்டமிடப்பட்டு புறக்கனிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டி இருந்தார்.

இதற்கமைய இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, முஜிபுர் ரகுமான் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது ராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மிகவிரைவில் உருவாக்கப்படவுள்ள இந்த குழுவின் பரிந்துரைக்கு அமைய பாடநூல்களில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.