அநியாயமாக பறிக்கப்பட்ட சுலக்சன் , கஜனின் உயிர்களிற்காக நீதியை கோராமல் எந்த நிகழ்வையும் நடாத்த முடியாது-சுமந்திரன்

283 0

download-3அநியாயமாக பறிக்கப்பட்ட சுலக்சன் , கஜனின் உயிர்களிற்காக கோபம் கொதிக்கும் இந்த சம்பவத்திற்கு நீதியை கோராமல் எந்த நிகழ்வையும் நடாத்த முடியாது. என்பது உண்மையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். கொக்குவில் பகுதியில் 2016-10-20 அன்று பொலிசாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக் கழக மாணவர்களான சுலக்சன் , கஜன் ஆகியோரின் 45ம் நினைவு நாளினை முன்னிட்டு நேற்றைய தினம் இரு வெட்டு வெளியீட்டு வைக்கப்பட்டதோடு வீதியும் திறந்து வைக்கப்பட்டது.இந்

நிகழ்வுகள் சுன்னாகத்தில் அமைந்துள்ள சுலக்சனான் இல்லத்தில் சுலக்சனின் சிறய தாயாரும் முன்னாள் போராளியுமான சிறி தலமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கூட்டமைப்பின் பேச்சாளர் இங்கு இது தொடர்பில் மேலும் உரையாற்றுகையில் ,

அநியாயமாக பறிக்கப்பட்ட சுலக்சன் , கஜனின் உயிர்களிற்காக கோபம் கொதிக்கும் இந்த சம்பவத்திற்கு நீதியை கோராமல் எந்த நிகழ்வையும் நடாத்த முடியாது. என்பது உண்மை . அந்த நீதுயை கோரவேண்டிய பொறுப்பு தமிழ்த் தலைவர்களாகிய எம்மையும் சாரும். இதேபோல் 10 வருடங்களிற்கு முன்பு எம்மோடு இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராச்சிற்கு இப்போதுதான் வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 10 வருடத்திற்கு முன்பு தேவாலயத்தில் பிரார்த்தனையின்போது பகிரங்கமாக கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பர்ராஜசிங்கத்திற்கு இன்னமும் வழக்கு ஆரம்பிக்கப்படவேயில்லை. இவற்றினை எல்லாம் நடாத்துவிக்கும் பொறுப்பு த.தே.கூட்டமைப்பிற்கு உண்டு. இதற்கு உரிய நீதி நடவடிக்கை எடுக்க தற்போது ஆவண செய்வதனை அறிவீர்கள்.

இதற்காக சுலக்சன் , கஜன் ஆகியோரன் விசாரணையும் 10 ஆண்டுகள் எடுக்கும் என நான் கூறவில்லை. அப்படி எடுக்காது ஆனால் ஒரு மாதத்தினுள் முடிக்கலாம் என கூறுவதாக பேசப்படுகின்றது. அது தவறு ஒரு மாத கால எல.லைக்குள் வழக்குத் தாக்கல் செய்யவே முடியாது. அப்படி வந்தால் அது பொய் வழக்காகவே முடியும். உண்மையாக , சரியான விசாரணைகள் இடம்பெற்று வழக்கு ஒன்று ஆரம்பிப்பதானால் ஓர் ஆண்டு காலம் பிடிக்கும்.

அவ்வாறான சந்தர்ப்பத்தினில்தான் சரியான விசாரணைகள் நடந்தனவா என்பதனைக் கூட அறியமுடியும். எனவே உணர்ச்சி வசப்பட்டு பிழையாக வழி நடாத்தி ஒரு மாதத்தினில் வழக்கு முடியும் எனக் கூறினால் அதனை நம்ப வேண்டாம். இவ் வழக்கானது சரியாக நடக்க வேண்டும் என்பதற்காகவே நானும் மேலும் சில அனுபவம் வாய்ந்த சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜராகியுள்ளோம்.

இம் மாணவர்களின் கொலை வழக்கு வெள்ளிக்கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது பொலிசார் சமர்ப்பித்த முதலாவது அறிக்கையில் இது ஓர் விபத்து என்றே அறிக்கையிட்டதாக நீதவான் எமக்கு வாசித்து காட்டினார். தொடர்ச்சியாக இச் சம்பவத்தினை மூடி மறைக்க எடுத்த முயற்சிகள் மீண்டும் ஞாபகப்படுத்தப்பட்டது. இதன் உண்மை வெளிக்கொணர நாம் எம்மால் ஆன அனைத்தையும் செய்வோம்.

இந்தக் கொடுர கொலைக்கு உரிய நீதி எழவேண்டும். இவ் மரணங்கள் வீனான மரணங்களாக இருக்கக் கூடாது என்பதில் நாம் திட சங்கரப்பமாகவுள்ளோம். தற்போதுள்ள புதிய அரசில் இவ்விடயம் தொடர்பில் கூடிய அழுத்தம் பிரயோகிக்க இடமுன்டு. இச் சம்மவம் இடம்பெற்றவுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஊடாக ஜனாதிபதி வரைக்கும் கொண்டு சென்றோம். அதனால் பொலிசாரினால் மூடி மறைக்க முடியாமல் போனது. அதேபோன்று இதன் உண்மை வெளிக்கொணரப்பட்டு நீதி கிடைக்க உங்களின் பிரதிநிதிகளாக நாம் முயற்சி செய்வோம் என்பதனையே தற்போது வாக்குறுதியாக கூறமுடியும்.

இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு நீதியான விசாரணை தேவை. அதேபோல் குடும்பத்திற்கான இழப்பீடும் தேவை. இதனால் நீதிக்கான போராட்டம் வலுவிழக்கச் செய்யாது தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இச் சம்பவத்திற்கான பொறுப்பை ஏற்று அதற்கான நீதியை ஏற்படுத்தி உரியவர்கள் தன்டிக்கப்படும் அதேவேளையில் இதனை தன்னுடைய உத்தியோகத்தர்கள் இழைத்தார்கள் என்பதனை அரசாங்கம் ஏற்று சில கடமைகளையும் செய்ய வேண்டும்.

இவர்கள் அநியாயமாக கொல்லப்பட்டவர்கள் என்ற வரலாற்றுப் பதிவும் இருக்க வேண்டும். ஆட்சி மாற்றத்தின் பிறகும்கூட இவ்வாறான கொலைக்கு காவற்படையாலேயே கொலை செய்யப்பட்டார். என்பதும் பதியப்பட வேண்டும். என்றார்