வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

327 0

karunasena-hettiarachchiவடக்குக் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், வடக்குக் கிழக்கில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அச்செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

வடக்கு மாகாணத்துக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செல்கிறேன். அங்குள்ள அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்.

வடக்கில் இடம்பெயர்ந்த 971 குடும்பங்கள் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதூன் வடக்கின் உண்மை நிலை. வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது உண்மையில்லை. போரின்போது இராணுவத்தினரால் கையப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை ஒப்படைக்கும் நிகழ்வுகளே நடைபெற்று வருகின்றன.

அனைத்துலகச் சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக நாம் இதனைச் செய்யவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.