தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபா அறவிடப்பட மாட்டாது

249 0

10561811_10153891741931327_8157193597005581823_n-450x2852017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் படி,வாகன சாரதிகளுக்கான தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபா நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் தண்டப்பணம் தொடர்பில் பஸ் உரிமையாளர் சங்கங்களிடம் கலந்துரையாடப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அகில இலங்கை தனியார் பஸ்உரிமையாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சம்மேளனத்திற்கும் இடையிலான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார் என சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.