128 பேருந்துகள் மீது தாக்குதல் 23பேர் காயம், 18 சாரதிகள் விளக்கமறியலில்!

258 0

92801808_twooசட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 19 முச்சக்கரவண்டிச் சாரதிகள், ஒரு பேருந்துச் சாரதி ஆகியோரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தனியார் பேருந்துச் சங்க ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பின்போது, கல்கந்த புகையிரதக் கடவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்துக்குப் பாதிப்பினை ஏற்படுத்தியதாக இவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட இவர்களை நேற்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது நீர்கொழும்பு பதில் நீதவான் சாந்த நிரியெல்ல இவர்கள் அனைவரையும் எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சாரதிகளின் ஆர்ப்பாட்டத்தினால் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனியார் பேருந்துச் சங்க ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பின்போது சேவையில் ஈடுபட்ட சுமார் 128 இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் ராமல் சிறிவர்தன தெரிவி்த்துள்ளார்.