தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இரவிலும் பார்க்கலாம்

49 0

z_p10-waning-01தெஹிவளை மிருகக் காட்சிசாலையை இரவிலும் பார்வையிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்த வருடம் நிறைவடைவதற்குள் தெஹிவளை மிருகக் காட்சிசாலையை இரவு வேளையிலும் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், கூடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மிருகங்களை திறந்த வெளியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனவள அமைச்சர் காமினி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த மிருகக் காட்சிசாலை சுமார் 100 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.