முதலாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பம்

272 0

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (13) முதல் முதலாம் தவணை விடுமுறைக்காக மூடப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சில் நேற்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

கொரோனா அச்சம் காரணமாக ஏப்ரல் மாத முதலாம் தவணை விடுமுறையை இவ்வாறு முன்கூட்டி வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் மீண்டும் இரண்டாம் தவணைக்காக பாடசாலை ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, விளையாட்டு வைபவங்கள் மற்றும் பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது தொடர்பில் குறித்த பாடசாலைகளின் அதிபரால் தீர்மானிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு ஏற்ப பேராயரின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகளையும் இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாட்டின் அனைத்து பௌத்த அறநெறி பாடசாலைகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.