இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பேருந்தொன்று தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3.6 L தூண் அருகில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாகும்புரவில் இருந்து காலி வரை பயணித்த பேருந்து ஒன்று இன்று காலை 7.00 மணிக்கு இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் தீயணைப்பு பிரிவினால் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து காரணமாக எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என கஹதுடுவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

