ஐக்கிய தேசியக்கட்சிக்கான புதிய கூட்டணிக்கான சின்னம் பெரும்பாலும் அன்னம் அல்லது யானையாகவே அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணிக்கான சின்னம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் நாளை இடம்பெறும்.
இதன்போது, ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் உருவாக்கப்படவுள்ள கூட்டணியின் சின்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும்.
அதாவது கட்சியின் சின்னம் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் தற்போது ஒருமித்த தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு அனைவரும் இணங்கியுள்ளனர்.
அந்தவகையில் புதிய கூட்டணிக்கான சின்னம் பெரும்பாலும் அன்னம் அல்லது யானையாகவே இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.-

