வீதி விபத்தில் பெண் ஒருவர் பலி

276 0

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்புவ – தங்கொட்டுவ வீதியில் நேற்று (17) இரவு 8 மணி அளவில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாய்க்கால், தம்பரவில பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கொட்டுவ பகுதியில் இருந்து சென்ற லொறி ஒன்று வீதியில் நடந்து சென்ற பெண் ஒருவர் மீது மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அங்கிருந்தவர்கள் குறித்த பெண்ணை உடனடியாக தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வென்னப்புவ பொலிஸார் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.