காரில் மோதி 5 வயது சிறுமி பலி

53 0

வெல்லவாய – வீரவில வீதியின் குடாஒய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி வீதியை கடக்க முற்பட்ட போது கார் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த சிறுமி வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊவ குடாஒய, ஹல்மில்ல வெவ பிரதேசத்தை சேர்ந்த 5 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குடாஒய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.