பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

57 0

2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பரீட்சைகளுக்கான அனுமதிகளை இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சைகளுக்கு இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இணையம் ஊடாக விண்ணப்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து மாணவர்களுக்காகவும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முதல் அவசியமான மாணவர் இலக்கம் வழங்கப்படும்.

இந்த இலக்கம் மூலம் மாணவர்களின் பரீட்சை முடிவுகள் தரவு கட்டமைப்பில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அந்த நடவடிக்கை மூலம் இலகுவாக அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை பரீட்சைகளின்போது கல்குலேட்டர்களை பயன்படுத்த அனுமதி வழங்கவும் எதிர்பார்த்துள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.