ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, கலகெதர பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் இன்று (05) அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்களின் பயணப் பொதியில் இருந்து 156 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 31,200 சிகரட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 15,76,000 ரூபா என சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிகரட்கள் அரசுடமையாக்கப்பட்டதுடன் குறித்த நபருக்கு 50,000 ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

