சமன் ரத்னபிரிய இன்று (05) பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன பதவி விலகியதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே சமன் ரத்னபிரிய நியமிக்கப்படவுள்ளார்.
இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளார்.
அதற்கமைய அவரின் நியமனம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை கடந்த 27 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டது.
அதற்கமைய இன்றைய தினம் சமன் ரத்நாயக்க பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய பாராளுமன்ற அமர்வில் சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

