சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகையொன்றை வைத்திருந்த நபர் ஒருவர் காலி துறைமுக பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்மீமன பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 8360 வௌிநாட்டு சிகரெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

