கொரோனா போன்று டெங்கு தொடர்பிலும் கூடுதல் கவனம் தேவை

409 0

புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்படுகின்றது.

இருப்பினும் டெங்கு நுளம்பு ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளில் குறைவு ஏற்படாத வகையில் பொது மக்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை டிசம்பர் மாத்தத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாத்தில் குறைவடைந்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.