அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 08 பிரதிவாதிகளுக்கு எதிராக 882 குற்றச்சாட்டுகளின் கீழ் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரால் இன்று(வியாழக்கிழமை) இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக 7 ஆயிரத்து 513 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதிவாதிகள் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
சட்ட மா அதிபரால் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 19 குற்றச்சாட்டுகளைத் தவிர்ந்த ஏனைய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கை தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது என மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் கடந்த 17ஆம் திகதி உத்தரவிட்டது.
இதற்கு அமையவே சட்ட மா அதிபரால் திருத்தப்பட்ட குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

