நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

286 0

நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் வறட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சி காரணமாக நீருக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

நீரைப் பெற்றுக்கொள்ளும் இடங்களில் நீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.