மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் – காவிந்த

301 0

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றுN இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘சீனா – வுஹான் நகரில் பரவிவரும் கொரோனா வைரஸ் உலகலாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

எமது நாட்டிலும் இந்த வைரஸ் தொற்றுதலுக்குள்ளான நோயாளியொருவர் கண்டறியப்பட்டுள்ளதால், இங்கும் அந்த பதற்ற நிலமை தோற்றம் பெற்றுள்ளதுடன் குறித்த பெண் தனது நாட்டவர்களுடன் இணைந்து நாட்டில் பல பகுதிகளில் நடமாடியுள்ளமையும் தெரிய வந்திருக்கின்றது.

இந்நிலையில் எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி 14 நாட்களுக்கு பின்னரே நோயின் அறிகுறிகளை அவதானிக்க முடியும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வைரஸ் தொற்றுக்குள்ளானோர்கள் நாட்டில் இருப்பார்களாயின் அவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக சுவாசக் கவசங்களை (மாஸ்க்) அணியுமாறு வைத்தியர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இதேவேளை சுவாசக் கவசங்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.