கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முன் பாதுகாப்பதற்கு ஆயுர்வேத பாணி மற்றும் மருந்துத் தூள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் சுதேசிய மருத்துவ திணைக்களம் இந்த மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மருந்து வகைகள் கொழும்பு மாநகர சபையின் ஊடாக நாடளாவிய ரீதியில் உள்ள 20 ஆயுர்வேத வைத்தியசாலையில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வகையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, ஆயர்வேத ஒளடதங்களை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கொரோனா வைரஸ் தொடர்பான கையேடொன்றை வழங்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மல்லி, இஞ்சி உட்பட பஸ்பங்கு எனப்படும் சிங்கள ஆயர்வேத ஐந்து வகை ஒளடதம் மிகவும் பொருத்தமானதாகும் என்றும் ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது.

