சீனாவில் இருந்து 661 பேர் நாடு திரும்பியுள்ளனர்

275 0

சீனாவில் இருந்து இதுவரையில் 661 பேர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்டிகளில்  மாத்திரம் இவ்வாறு 661 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை  170 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சீனா முழுவதும் 7,711 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் 170 பேர் குணமடைந்து வெளியேறியியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரஸினால் உயிரிழந்துள்ளனர். இதனால் வைத்தியசாலைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனையடுத்து சீனாவில் தங்கியுள்ள ஏனைய நாட்டவர்களை தத்தமது நாட்டிற்கு அழைத்து வரும் முயற்சிகளில் நாடுகள் ஈடுபட்டுள்ளன.

அதற்கமைய இலங்கை நாட்டவர்களை நாட்டிற்கு அழைத்து வரும் முயற்சியில் இலங்கை அரசாங்கமும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.