ஹெரோயினுடன் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

310 0

192 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் பண்டாரகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றவியல் விசாரணை பிரிவினரால் இன்று (30) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 10 கைத்துப்பாக்கிகளும் மற்றும் 19 மெகசின்களும் சந்தேகநபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றவியல் விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.