நாடளாவிய ரீதியில் கடந்த 23 ஆம் திகதி இரவு 11 மணி முதல் முதல் நேற்று அதிகாலை மூன்று மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2394 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1466 பேரும், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 191 பேரும் மற்றும் சந்தேகத்தின் பேரில் 737 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை அந்தந்த நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

