சஹ்ரானின் பிரதான இரு சகாக்கள் டுபாயில் கைது!

48 0

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய பிரதான பயங்கர வாதியான சஹ்ரான் ஹாஷிமின் பிரதான இரு சகாக்களை ஐக்கிய அரபு அமீரகம் சென்று கைது செய்துள்ள சி.ஐ.டி. சிறப்புக் குழு அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து சிறப்பு விசாரணைகளை ; ஆரம்பித்துள்ளது

குறித்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து நாட்டிலிருந்து தப்பியோடியதாக கூறப்படும் இருவரே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர்களை 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை நேற்று பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

நான்கு நாட்களுக்கு முன்னர், சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேன தலைமையில் பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார மற்றும் சார்ஜன் நத்தலால் உள்ளிட்ட குழுவினர் ; இவர்களைக் கைது செய்ய ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளனர். இந் நிலையிலேயே அந் நாட்டு பாதுகாப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் ; குறித்த இருவரையும் கைது செய்துள்ள அவர்கள் , சந்தேக நபர்களை டுபாயிலிருந்து நாட்டுக்கு அழைத்து வந்தனர்.

நாவலபிட்டி – ஹப்புகஸ்தலாவை பகுதியைச் சேர்ந்த 30 வயதான ; மொஹம்மட் சலீம் அப்துல் சலாம், ; அம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதான ; மொஹம்மட் சஹான் மொஹம்மட் றியாஸ் அகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டு டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணைகள் இடம்பெறுவதாக ; உயர் அதிகாரி கூறினார்.

நேற்றைய தினம் அவ்விருவரும் சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் முன்னிலையிலும் முன்னிலைபப்டுத்தப்பட்டு அறிக்கையும் பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ; உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளிநாடுகளில் இருந்த பயங்கரவாத சந்தேக நபர்கள் 6 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்ப்ட்டுள்ள நிலையில் இவர்கள் இருவருடன் சேர்த்து அந்த ; எண்ணிக்கை தற்போது எட்டாக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு மேலதிகமாக சுமார் 65 பயங்கரவாத சந்தேக நபர்கள் உயிர்த்த ஞாயிரு விவகாரத்தில் நேரடியாக தொடர்புபட்டமை, உதவி ஒத்தாசை வழ்னக்கியமை தொடர்பில் கைது செய்யப்ப்ட்டு குற்றப் புலனயவுத் திணைக்களம் மற்றும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுகளின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்ப்ட்டு வருகின்றனர்.