ரஞ்சனுடன் உரையாடிய ஆளும் தரப்பு உறுப்பினர்களின் குரல் பதிவுகள் எங்கே?: ஹரீன் கேள்வி

244 0

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை அரசாங்கம் பொதுத்தேர்தலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றது. இவருடன் தொலைபேசியில் ஆளும் தரப்பின் முக்கிய உறுப்பினர்களும் உரையாடியுள்ளார்கள்.

அந்த குரல் பதிவுகளை ; அரசாங்கம் இதுவரையில் வெளியிடாமையின் பின்னணி என்ன ; என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ கேள்வியெழுப்பினார்

வெலிகட சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை இன்று வியாழக்கிழமை சிறைச்சாலையில் சந்தித்த ; பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆளும் தரப்பில் ; உள்ள ; முக்கிய தரப்பினரும் ரஞ்சனுடன் ; பல விடயங்கள் குறித்து தொலைபேசியில் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளார்கள். அவர்களின் உரையாடலும் ; ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை இதுவரையில் அரசாங்கம் வெளியிடாமையின் பின்னணி ; என்ன.?

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ;சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முனைந்தாலும் அவரை சூழ்ந்துள்ளோர் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.

சிறந்த அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சியமைத்தவர்கள் இன்று மறைமுகமாக ; வெறுக்கத்தக்க ; விடயங்களை மாத்திரம் பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கின்றார்கள்.

<p>நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் இன்று ; நிறைவேற்றப்படவில்லை . மாறாக ; தீவிர ; அரசியல் பழிவாங்கல் மாத்திரமே இடம் பெறுகின்றன என்றார்.