வெடிவிபத்தில் படுகாயம் !

47 0

திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மிருகங்களை வேட்டையாடு வதற்கு பயன்படுத்திய வெடிபொருள் வெடித்ததில் நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

சேறுநுவர பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஆர். பீ. புஞ்சி பண்டா என்ற நபரே இவ்வாறு ; படுகாயமடைந்துள்ளார்

வெடி பொருட்களை எடுத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்ற வேளை தன்னிடம் இருந்த வெடி பொருள் வெடித்தமையினால் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

படுகாயமடைந்தவரின் உடம்பில் இரும்பு துண்டுகள் உட்புகுந்துள்ளதையடுத்து சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.