ரஞ்சனின் மற்றுமொரு குரல் பதிவு

273 0
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ அதேபோல் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரை கைது செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க மற்றும் பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணை பிரிவின் முன்னாள் பிரதானி ரவி வித்யாலங்கார ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைப்பேசி உரையாடல் நேற்று (11) ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

அதேபோல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயம் டில்ருக்சி டயஸ் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாக கூறப்படும் மற்றுமொரு சர்ச்சைக்குரிய தொலைப்பேசி உரையாடலும் இராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

அத்துடன் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ அதேபோல் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரை கைது செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க மற்றும் பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணை பிரிவின் முன்னாள் பிரதானி ரவி வித்யாலங்கார ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைப்பேசி உரையாடல் குறித்த குரல் பதிவுகள் சிலவற்றை சிங்களே அமைப்பும் நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்டது.